நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 340)
என்ன வேடம் புனைந்தாலும், அந்த கதைப் பாத்திரமாக மாறாது, அவர் அவராகவே இருக்கும் நடிகர்கள் இருக்கின்றனர். ஆனால், சிவாஜி நடித்த படங்களில் கணேசன் என்பவர் மறைந்து அப்பாத்திரம் மட்டுமே வெளிப்படும்.
சிவாஜி ஹாலிவுட்டில் பிறந்து இருந்தால், ஹாலிவுட்டின் மாபெரும் நடிகர்கள் வேலை இழந்து போயிருப்பர் என்று மார்லன் பிராண்டோ கூறும் அளவுக்கு நடிப்பின் சிகரங்களைக் கண்டவர் சிவாஜி. அவரைப் பற்றிய சிறந்த ஆய்வு நூல் இது.
தொல்காப்பியம், சிலப்பதிகாரம் இவை சொல்லும் நாடக இலக்கணம் பற்றியும் சிறப்பாகப் பேசுகிறார் ஆசிரியர். ஸ்தானிஸ்லாவங்கி சொன்ன நடிப்பு முறை பற்றியும் அலசுகிறார். அபூர்வமான புகைப்படங்கள், சிவாஜி நடித்த திரைப்படங்களின் பட்டியல், நடிகர் திலகம் பெற்ற பரிசுகளும், பட்டங்களும் என்று புள்ளி விவரங்கள் தரும் இந்த நூல் ஒரு விரிவான ஆழமான ஆய்வு நூல்!