ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் நன்னிலம், வி.ராஜகோபால கனபாடிகள், வைதிகஸ்ரீ , புது எண்.488 பழைய எண். 175 டி.டி.கே. ரோடு, ஆழ்வார்ப் பேட்டை, சென்னை-600004. ( பக்கம் 158)
செய்ய வேண்டியதைச் செய்வதும், தவிர்ப்பதைப் புறந்தள்ளுவதும் மனிதனின் சிறப்பியல்பாகும். திருமாங்கல்யம் என்பது தங்கத்தால் ஆனது என்பதை விட சரடு தான் முக்கியமானது, அதை மந்திரத்துடன் அணிவது சரி என்றும், அதில் சாவி, ஊக்கு ஆகியவற்றை மாட்டுவது சரியல்ல.
(பக்கம் 34), சிரார்த்தத்திற்கு பதிலாக அன்னதானம் தவறு, பூஜை அறையில் சாமி படங்களுக்கு மின் ஒயர் அலங்காரம் கூடாது, வீட்டு வாசலில் பிளாஸ்டிக் , பித்தளைத் தோரணங்கள் கூடாது, இப்படிப் பல விஷயங்கள் தரப்பட்டிருக்கின்றன. தர்மத்தின் வழிவாழ விரும்பும் அனைவரும் இவற்றை ஏற்பர்.