முகவரி: வடக்கு கோட்டையார் முகமது அப்துல்லா அறக்கட்டளை, 96. பெரிய தெரு, கூத்தாநல்லூர்-614101, திருவாரூர் மாவட்டம். (பக்கம்: 216)
இந்து-முஸ்லிம் மதங்களுக்கு இடையே உள்ள நல்லுறவை எடுத்துக் காட்டும் ஏராளமான தகவல்கள் இந்நூலில் உள்ளன. இந்து அரசர்களின் அமைச்சரவையை அலங்கரித்த இஸ்லாமிய அமைச்சர்கள், அவர்கள் ஆற்றிய பணிகள், தலைச் சங்க காலத்திருந்தே தமிழர்-அரேபியர் இடையே தொடரும் உறவு ஆகியவை அழகாக விளக்கப்பட்டுள்ளன.
பள்ளிவாசல்களுக்கு ஊர்களை கொடையாக கொடுத்த ராமநாதபுரம் சேதுபதி மன்னர்,வள்ளல் சீதக்காதியின் கொடைத் திறன் ஆகியவை குறித்த தகவல்களும் ஆதாரத்துடன் விளக்கப்பட்டுள்ளது. சமூக நல்லிணக்கத்துக்கு பலம் சேர்க்கும் ஏராளமான கருத்துக் களஞ்சியங்கள் இந்நூலில், கொட்டிக் கிடக்கின்றன.