ஸ்ரீமுகம் பப்ளிகேஷன்ஸ், 178-ஈ, அனுதீப் அபார்ட்மென்ட்ஸ், நடேசன் நகர், சென்னை-600 092. (பக்கம்: 192.)
இருபத்து இரண்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு மன சந்திப்புகள். ரிசர்வ் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற வி.எல்.பார்த்தசாரதி என்பவர் தனது மனைவியின் பெயரில் எழுதிய கதைகள் இவை. ஒவ்வொரு சிறுகதையும் சமூகத்தின் ஏதோ ஒரு பிரச்னையை உணர்த்தும் வகையில் அமைந்திருப்பது இந்தக் கதைகளின் சிறப்பு.