முகப்பு » விளையாட்டு » டோனி தி பாஸ்

டோனி தி பாஸ்

விலைரூ.50

ஆசிரியர் : சி. முருகேஷ் பாபு

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: விளையாட்டு

ISBN எண்: 978-81-89936-83-9

Rating

பிடித்தவை
விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84

கபில்தேவ் தலைமையில் 1983ல் உலகக் கோப்பையை இந்தியா வென்றபோது டோனி இரண்டு வயதுக் குழந்தை!
அண்மையில் நடைபெற்ற ட்வென்டி ட்வென்டி போட்டியில் உலகக் கோப்பையை நமது இந்திய அணி ஜெயித்தபோது டோனி 26 வயது இளைஞர். அணியின் தலைவர்! பிரமிக்க வைக்கும் வளர்ச்சி இது!


கிரிக்கெட் அதிகம் அறிமுகமில்லாத ஒரு மாநிலத்தில் பிறந்து, வளர்ந்து உலகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் அதிரடி ஆட்டக்காரர் டோனி.
சமீபத்தில் இங்கிலாந்து பயணத்துக்குப் பின் திடீரென்று கேப்டன் பதவியிலிருந்து ராகுல் டிராவிட் விலகிவிட, 20‍_20 உலகக் கோப்பை அணியின் தலைமைப் பொறுப்பு டோனியின் வலிமைமிக்க தோளில் ஏற்றி வைக்கப்பட்டது. டோனியைப் பொறுத்தவரை இது சுகமான சுமை! புன் சிரிப்புடன் அதை ஏற்றுக்கொண்டு மிஸ்டர் கூல் மாதிரியாகச் செயல்பட்டு, தனக்குக் கீழ் விளையாடிய துடிப்புமிக்க இளம் வீரர்களை அரவணைத்து வெற்றிக் கனியைப் பறித்து வந்திருக்கிறார்!


இன்றைய காலக்கட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களில் இளம் வயதிலேயே பலர் உயர் பதவிகளில் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறார்கள். அதேபோல் அரசியலிலும் அவ்வப்போது இளம் ரத்தம் பாய்ச்சப்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ஆனால், விளையாட்டில் முக்கியமாக கிரிக்கெட்டில் இதுமாதிரி இளசுகளின் தலையில் அத்தனை எளிதில் கிரீடம் சூட்டப்படுவதில்லை. விதிவிலக்காக டோ னிக்கு இந்தப் பெருமை கிடைத்திருக்கிறது!


டோ னிக்கு இது எப்படி சாத்தியமாயிற்று என்பதை விளக்குகிறது இந்த நூல். அவர் பிறந்து, வளர்ந்த சூழலில் ஆரம்பித்து, உச்சத்தை அவர் எட்டிப் பிடித்தது வரையிலான பல்வேறு சம்பவங்களை இந்த நூலில் சுவைபட தொகுத்திருக்கிறார் சி.முருகேஷ்பாபு.


வெற்றி நாயகனின் இந்த வாழ்க்கைக் கதை, இலக்குகள் பல கொண்டு வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்கள் பலருக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது இந்த நூல்.

Share this:

வாசகர் கருத்து

- ,

super dhoni

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us