ஐம்பது ஆண்டுகளுக்குள் உலகில் கிட்டத்தட்ட மறைந்துவிட்ட கழுகு இனம் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். அழிவின் விளிம்பில் இருக்கும் ஓர் உயிரினத்தை மீட்டு காக்க முடியும் என்பதை நிரூபிக்கும் தகவல்கள் அடங்கியுள்ளன.
இந்தியா முழுதும் பரவலாக காணப்பட்ட பாறு என்ற கழுகு இனம் தற்போது அருகிவிட்டது. அதை காக்கும் பணியில் கண்ட அனுபவத்துடன் கழுகு இனம் பற்றிய அரிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நுால் தமிழ், ஆங்கிலம் என இரு மொழியில் உள்ளது. மொத்தம் 15 தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. கழுகினங்கள் மற்றும் அவற்றின் வாழ்க்கை முறை பற்றிய அரிய போட்டோக்கள் தெளிவாக உள்ளன.
மனித தவறுகளால் இயற்கை அழிவதை கவலையுடன் பதிவு செய்து, தவிர்க்க பொறுப்புடன் வலியுறுத்துகிறது. இயற்கையுடன் மொழிக்கு உள்ள தொடர்பு இயல்பாக காட்டப்பட்டுள்ளது. வரலாற்று போக்கில் கழுகு இனம் பற்றிய தகவல்களும் உள்ளன. அரிதின் முயன்று தொகுக்கப்பட்டுள்ள இயற்கை பொக்கிஷம் இந்த நுால்.
– பாவெல்