சமூக நடப்புகள், பயணங்களை நயத்துடன் கூறும் கவிதை தொகுப்பு நுால்.
சர்க்கரை நோய், விருப்ப உணவை தவிர்க்க சொல்வதை, கடவுள் வழியாக கேள்வி கேட்கிறது. பயணத்தில் பெய்யும் மழையை புரிந்து கொள்ள சொல்கிறது.
காலை குளிரை கட்டி அணைப்பதில் கிடைக்கும் சுகத்தை அனுபவிக்க வலியுறுத்துகிறது. கண்ணை மூடி திறந்தால், உலகம் என்னவாக இருக்கும் என சிந்திக்க துாண்டுகிறது. துப்பாக்கி வைத்திருந்தாலும், புலிக்கு பயம் ஏற்படாது என வீரத்தை விதைக்கிறது.
இன்றைய தலைமுறை, சுதந்திர தின கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவதை கவனிக்க சொல்கிறது. போரால் ஏற்படும் பலியுடன், உயிருடன் இருப்போரின் வலியையும் பதிய வைக்கிறது. அன்றாட அனுபவங்களை கவிதையாக்க யோசிப்போருக்கு உதவும் நுால்.
– டி.எஸ்.ராயன்