நாட்டுப்புற வாழ்வை மண் வாசனை மாறாது கவிதையில் படைப்பாக தரும் நுால். காதல் உணர்வு, தாய்மை மகத்துவம், சுற்றுச்சூழல், பிற உயிரினங்கள் மீது காட்டும் கனிவு, சமூக அவலம், அரசியல் சூழ்ச்சி என பல பொருண்மைகளில் இடம்பெற்றுள்ளன.
மனைவி பிரசவத்தில் கணவன் தவிப்பு, கையில் சிக்கித் தவிக்கும் மீன் பற்றிய உவமையுடன், ‘பரந்து விரிந்த உலகம் இது; படித்தவனுக்கு அல்ல; சாதனை படைத்தவனுக்கே...’ என்ற வரிகள் நம்பிக்கை ஊட்டுகின்றன.
‘புத்தகத்தின் பக்கமெல்லாம் உன் விரல்கள் பட்டு அழுக்காகட்டும்; பேனா பிடித்து எழுதி எழுதியே உன் விரல்களின் ரேகைகள் தேயட்டும்’ என கல்வியின் சிறப்பை விளக்குகிறது. கவிஞர்களுக்கு உத்வேகம் கொடுக்கும் நுால்.
–- புலவர் சு.மதியழகன்