திருக்குறளை பாரம்பரியமாக புரிந்துள்ள கருத்துக்களை கேள்விக்குள்ளாக்கியுள்ள நுால். நிஜ வாழ்க்கை காட்சிகளில் பொருந்தக்கூடியது பற்றி விவாதிக்கிறது.
பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்ற பஞ்சபூதங்கள் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை ஒப்புக்கொண்டு, பண்டைய ஞானத்தை சம காலத்துடன் இணைப்பதை குறித்து விளக்குகிறது. பரிணாம வளர்ச்சியை மருத்துவ அறிவியலுடன் இணைத்து, துறைகளுக்கு இடையேயான தொடர்பில் அழுத்தம் தருகிறது.
உலகளாவிய தன்மை, இனம், மொழி, மதம் மற்றும் நாடு என்ற எல்லைகளைக் கடந்துள்ளது குறித்து பேசுகிறது. வள்ளுவரின் போதனைகளில் நான்கு அடிப்படைக் கோட்பாடுகளை வெளிப்படுத்துகிறது. முதிர்ச்சியற்ற ஞானத்தை ஆராய்கிறது.
– வி.விஷ்வா