கிழக்கு, எண்.16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 230.)
கடந்த 1946-48ம் ஆண்டுகளில் ஆந்திர நிஜாம் சமஸ்தானம் இந்திய அரசுடன் இணைவதற்கு முன் நடைபெற்ற கலவர அரசியல் சூழலில் ஒரு தலித் குடும்பத்து இளைஞனின் போராட்டத்தை விவரிக்கும் தற்கால வரலாற்றுப் புதினமான இது அசோகமித்திரனுக்கு அகில இந்திய அளவில் அங்கீகாரம் வழங்கிய பெருமை பெற்றது. ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நாவல் வடுக்கள் மறைந்தும் உள்காயம் ஆறாத மத, அரசியல் பேதங்களால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களின் உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பதாய் உள்ளது. வாசகர்கள் மனதைத் தொடக்கூடிய அருமையான படைப்பு.