தாந்திரிகம் எனப்படும் சக்தி வழிபாடு குறித்து விளக்கும் நுால். துர்க்கையம்மன், மாரியம்மன், காளியம்மன் புராணக்கதைகளை எளிய நடையில் கூறுகிறது.
சக்தி வழிபாட்டில் அடியெடுத்து வைத்த கம்பர், இளங்கோவடிகள், காளிதாசர், அருணகிரிநாதர், குமரகுருபரர், அபிராமி பட்டர், மகாகவி பாரதியார் என வரிசைப்படுத்தி கூறுகிறது. இடை சங்க காலத்தில் போர் வெற்றிக்காக காளிதேவி போற்றப்பட்டாள் என்கிறது.
நவராத்திரியில் மலைமகள், அலைமகள், கலைமகள் என்ற மூவரும் போற்றிக் கொண்டாடும் முறையை விளக்குகிறது. கம்பரின் சரஸ்வதி அந்தாதியும் தரப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மாரியம்மன் கோவில்களை குறிப்பிட்டு விளக்கும் நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து