கிழக்கு பதிப்பகம், 16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 262. விலை: ரூ.100).
அமரர் க.நா.சு.,வுக்குப் பிறகு விமர்சனத் துறையில் சலசலப்பை ஏற்படுத்தும் சர்ச்சைக்குரியவராக வலம் வருபவர், வெங்கட் சுவாமிநாதன். சிறிய பத்திரிகையில் அதிகம் எழுதுபவர்களில் ஒரு சிலரின் அபிமானத்திற்குரியவர் என்ற அடையாளத்துடன் இலக்கிய வீதியில் நடமாடும் வெ.சு., இந்தக் கட்டுரைத் தொகுப்பில் புதுக்கவிதை எழுதும் கவிஞர்களை "காய்தல் உவத்தலின்றி' வறுத்தும் எடுத்திருக்கிறார்; வாழ்த்தியும் ஆசீர்வதித்திருக்கிறார். ஆழமாக சிந்திக்கவும் நிதானமாக யோசிக்கவும் இந்தத் தொகுப்பில் நிறைய விஷயங்கள் உள்ளன. "தித்திக்கும் திருட்டு மாம்பழங்கள்' கட்டுரை உண்மையிலேயே தித்திக்கிறது. ஆசிரியரின் நீண்ட கால வாசிப்புப் பழக்கமும், இலக்கிய விசாரமும் நமது கவனத்தை அதிகம் கவர்கின்றன. கிழக்கு பதிப்பகம், முற்றிலும் வித்தியாசமான பாணியில் தனது பதிப்பகப் பணியை வடிவமைத்துக் கொண்டிருப்பதை அவர்களின் பல வெளியீடுகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் புத்தகமும் மேலே குறிப்பிட்ட ரகம் தான்.