ஆன்மிக சிந்தனையின் விளைவாக மலர்ந்துள்ள தன்னம்பிக்கை நுால். வாழ்வது மிகவும் கடினம் என கலங்க வேண்டாம்; அது பஞ்சு மெத்தை போல மிருதுவானது; இதில் நடந்து பார்க்க ஆசையிருந்தால், இந்த புத்தகத்தை இன்றே வாங்கி படிக்கலாம். மனிதன் நுாறாண்டு சிறப்பாக வாழ்வதற்கான வழிகளைக் காட்டுகிறது.
அப்துல் கலாமின் விண்வெளிக் கனவு, ஒரு காலத்தில் பலிக்காமல் போனது. சுவாமி சிவானந்தரை சந்தித்து, தன் வருத்தத்தை வெளியிட்டார். அதற்கு சுவாமி அளித்த பதிலால் எத்தனை சாதனைகள் படைத்தார் என்பதை அறிவோம். அந்த பதில்தான் என்ன... இப்படி பல சம்பவங்களைத் தொகுத்து தருகிறது. வாழ்வில் ஜெயித்துக் காட்ட உதவும் அற்புதமான நுால்.
– தி.செல்லப்பா