கால பைரவரின் மகிமைகள், தர்மம் செய்வதன் உயர்வு, மனிதநேயத்தின் மேன்மையை உரைக்கும் நுால்.
மார்கழி மகிமைகள், திருவண்ணாமலை தீபக்கொப்பரையில் எடுக்கப்படும் மையால் பெருமாளுக்கு தைலக்காப்பு செய்யப்படும் செய்தி, ஐம்பூதங்கள், ஐந்து வகை பாதகங்களை அறியத் தருகிறது.
தமிழ் எழுத்துகளில் தந்திர ரகசியம், ஆகம விதி லயங்கள் கூறப்பட்டுள்ளது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என இறைவனின் ஐந்தொழில்கள் விளக்கப்பட்டுள்ளன. ஆன்மாவை அமைதிப்படுத்த படிக்க வேண்டிய அற்புத நுால்.
– புலவர் சு.மதியழகன்