அமெரிக்கா சிலிக்கான் பள்ளத்தாக்கில் குடியேறிய இந்தியர்களின் வாழ்வின் பின்னணியில் அமைந்துள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
அமெரிக்காவில் வாழ்வது பெருமை என்ற நிலையில், அங்கு ஏழை மக்களுக்கு எதிரான பாகுபாடு போன்றவை அதிர்ச்சி தரும் வகையில் அலசப்பட்டுள்ளது. வாகனம் ஓட்ட உரிமம் பெறுவதில் ஏற்படும் நெருக்கடி அனுபவம் யோசிக்க வைக்கிறது.
புதிதாக குடியேறுவோர், அங்குள்ளோருடன் பழகுவதில் உள்ள சிக்கலை வெளிப்படுத்துகிறது. வீடு, வேலையின்மையால் தவிப்பதும் பேசப்பட்டுள்ளது. உணவு வீணடிக்கப்படுவதை பற்றியும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஸ்பானிஷ்காரர்களை பற்றியும் விவரிக்க தவறவில்லை. அமெரிக்காவில் குடியேறுவோர் வாழ்வை மையமாக உடைய நுால்.
– முகில்குமரன்