விமானத்தை கண்டுபிடித்து பறக்கவிட்டது இந்தியாவில் தான் என்ற மையக்கருத்துடன் எழுதப்பட்டுள்ள நாவல் நுால். விமானம் என்ற வான ஊர்தியை பறக்கவிட்ட போது, விடுதலை வீரர் பாலகங்காதர திலகர், குவாலியர் மகாராஜா மாதவராவ் சிந்தியா உடனிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
நாவலின் துவக்கத்தில் பாரத்வாஜ முனிவரின் ஓலைச்சுவடியை கண்டெடுத்து, அதில் உள்ளபடி வான ஊர்தியை வடிவமைத்ததாக கூறப்பட்டுள்ளது. அதில், பல்வேறு வகை இடையூறுகள் ஏற்பட்டதையும் சுட்டிக்காட்டுகிறது.
மும்பை தானே நகரில் பறக்கவிட்ட நிகழ்வுகள் விரிவாககூறப்பட்டுள்ளது. சிறிது துாரம் பறந்த வான ஊர்தி விழுந்த போது, ஆங்கிலேய வீரர்கள் நொறுக்கி சிதைத்ததாக கூறப்பட்டுள்ளது. ஆர்வத்தை துாண்டும் நாவல்.
-– முகில்குமரன்