விருதுநகர் மாவட்டத்தில் புகழ் பெற்று விளங்கும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோவில் பற்றி அறிமுகம் செய்யும் நுால். வண்ணப் படங்களுடன் தகவல்களை தருகிறது. சதுரகிரி மலையின் பெயர் காரணத்தை தனித்துவமாக விளக்குகிறது. அங்கு செல்லும் வழிகள், மலைப்பாதை விளக்கப்படம் என படிப்படியாக தகவல்களை தருகிறது. சதுரகிரி மலையில் அறியாத பல இடங்களை, ஊற்று, ஓடை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை அறிய வைக்கிறது.
தனித்துவமிக்க பாறைகள் பற்றியும் குறிப்புகள் தந்து, அவற்றின் சிறப்புகளை எடுத்துரைக்கிறது. சதுரகிரியின் இயற்கை அமைப்பு, தொண்டு செய்யும் மடங்கள், சிறப்பு பற்றியும் தெளிவாக்குகிறது. சதுரகிரி மலை மற்றும் கோவில் பற்றி அறிய வைக்கும் நுால்.
– மதி