கிழக்கு பதிப்பகம், 16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 112).
ஆன்மிகப் பயணம் மேற்கொள்பவர்கள் பெறும் அனுபவத்தைச் சொல்லக் கேட்டாலே, நாமே அதுபோன்ற ஒரு பயணத்தை மேற்கொண்டது போல் உணர்வது உண்டு. அதுவும் இலந்தை ராமசாமி போன்ற எழுத்தாளர், கயிலாயம் போன்ற மிக அபூர்வமான யாத்திரை சென்று தனது அனுபவங்களைப் பதிவு செய்து, அவற்றைப் படிக்கும் வாய்ப்பை நமக்கு ஏற்படுத்திக் கொடுத்தால் கேட்கவா வேண்டும்? நாமும் அவருடன் யாத்திரை செய்தது போலவே உணர்கிறோம்!
இதை அவருடைய எழுத்தின் வெற்றி எனச் சொல்வதா அல்லது அவர் சென்று திரும்பிய கயிலாய மலையின் மகத்துவத்தின் தனித்துவம் எனச் சொல்வதா என்று தெரியவில்லை. யாத்திரை செல்வதற்கு முன் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆசிரியர் எழுதியிருக்கிறார். இதற்கு மேலே இதைப் பயண நூல் என்று கூறுவதை விட அரியதோர் வழிகாட்டி நூல் என்றே குறிப்பிடத் தோன்றுகிறது. வரை படங்கள் நிறைவு தருகின்றன. ஆனால், புகைப்படங்கள் திருப்தி தரவில்லை. இவற்றை தவிர்த்திருக்கலாம்.