திருக்குறள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்: 252.)
மகாகவி பாரதியாரின் முத்தான படைப்புகள் மூன்று. அவை கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு ஆகும். பக்தி நயம் மிக்கது. கண்ணன் பாட்டு, காப்பிய நயம்மிக்கது பாஞ்சாலி சபதம், இலக்கிய நயமும், தத்துவச் செறிவும் கொண்டது குயில் பாட்டு.
""குயில் பாட்டில் இசையின்பம், புலன் இன்பம், ஆன்ம இன்பம் ஆகியவை குடி கொண்டுள்ளன. ஆய்வாளரின் பயிலறிவுக்கும், பட்டறிவுக்கும், வயதுக்கும், வாழ்க்கை நிலைக்கும் ஏற்றவாறு, அதில் பல வண்ணப் பார்வைகள் பதிந்துள்ளன. சிறுவர் முதல் பெரியவர் வரை ஏதோ ஒரு வகையில், இப்பாட்டால் ஈர்க்கப்படுகின்றனர் (பக்.99) என்று இந்நூலாசிரியர் காட்டும் ஆய்வு முடிவு அற்புதமான உண்மையாகும்.
மூன்று பகுதிகளாக இந்நூல், பரவிக் கிடக்கிறது.