முகப்பு » பொது » பண்டைய இரும்புத்

பண்டைய இரும்புத் தொழில் நுட்பமும் உலோகவியலும் - ஓர் ஆய்வு

விலைரூ.950

ஆசிரியர் : முனைவர் சசிசேகரன்

வெளியீடு: நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
வெளியீடு: நியூ இரா பப்ளிகேஷன்ஸ், அஞ்சல் பெட்டி எண்.8780, அடையாறு, சென்னை.

எழுத்துச் சான்றுகள் இல்லாத மனித வரலாற்றைத் தொல்லியல் அறிஞர்கள் மனிதன் பயன்படுத்திய கருவிகள் மற்றும் உலோகங்களின் அடிப்படையில் பல்வேறு பண்பாட்டுக் காலங்களாக வகைப்படுத்துவர். இவ்வழக்கம் உலகம் முழுவதும் இன்றளவும் பின்பற்றப்படுகிறது. கற்காலம்,கல் -செப்புக் காலம்,செப்புக் காலம், இரும்புக் காலம் என வகைப்படுத்தப் பட்டுள்ள இப்பண்பாட்டுக் காலங்களில் மனிதனின் அறிவியல் திறன் வளர்ச்சியைப் பெரிதும் அறிய முடிகிறது. தொன்மை வாய்ந்த இந்திய வரலாற்றில் இரும்புக்காலப் பண்பாடு மிகச் சிறந்த இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் பெரும்பாலான இடங்களில் இரும்புக் கருவிகள் மிகுந்த அளவில் பெருங்கற்காலப் பண்பாட்டில் இருந்துள்ளன என்பதை அறிய முடிகிறது. இருப்பினும், பண்டைத் தமிழகத்தில் பரவலாக இருந்த இரும்புத் தொழிலின் தொழில்நுட்ப வரலாற்றையும் அதை உருக்குவதற்காக தமிழன் பயன்படுத்திய பல்வேறு முறைகளையும் அறிவியல் முறைப்படி ஆய்வு செய்து இதுவரை எந்த நூலும் வெளிவரவில்லை என்பது வெளிப்படை. இதைப் போக்கும் வகையில் முனைவர் சசிசேகரன் எழுதியுள்ள "பண்டைய இரும்புத் தொழில் நுட்பமும் உலோகவியலும் - ஓர் ஆய்வு" என்று ஆங்கில நூல் தொல்லியல் ஆய்வாளர்களுக்கும் பண்டைத் தொழில்நுட்பங்களை அறிய விழையும் ஆர்வலர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். தமது முதுமுனைவர் பட்டத்திற்காக பல்வேறு ஊர்களுக்கு நேரிடையாககள ஆய்வுகள் சென்றும் தமிழ் நாட்டில் பிற துறைகள் செய்த அகழாய்வுகளில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையிலும் ஆசிரியர் எழுதியுள்ளார்.
இந்நூல் நான்கு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. முதல் அத்தியாயம் இந்தியாவில் இதுவரை தொன்மைக் காலத்தில் இரும்பு மற்றும் உருக்குத் தொழில்நுட்பம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இவ்வரிசையில் திலிப் சக்கரவர்த்தி ஜே.எம்.ஹீத், ஸ்காப், பாஞ்சணன் நியோகி, என்.ஆர்.பானர்ஜி, பியர்சன், பூசானன், வாய்சேய், பால்போர், சாரதா சீனிவாசன் போன்றோர் மேற்கொண்ட ஆய்வுகள் பற்றிய சுருக்கம் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் பண்டைக் காலத்தில் எங்கெங்கு இரும்பு வெட்டி எடுக்கப்பட்டன? அவற்றை மூலத்தாதுவிலிருந்து பிரித்தெடுக்க பண்டைய இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட முறைகள் எவை? என்பதையும் இவ்வாய்வறிஞர்கள் குறிப்பில் உள்ளதைச் சுட்டிக்காட்டும் இந்நூலாசிரியர் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இரும்புத் தாதுக்கள் பண்டைக்காலத்தில் இருந்து காணப்படுகின்றன என்பதை நிலப்பொதியியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர் என்பதையும் மாவட்ட வாரியாகப் பகுத்துள்ளார். தமிழகத்தில் இரும்புத் தாதுக்கள் கிடைக்கின்ற பகுதிகளை 12 பகுதிகளாக மாவட்ட அடிப்படையில் பிரித்துள்ள இவர் குறிக்கப்படாத பிற மாவட்டங்களில் இரும்புத்தாது உள்ளனவா? என்பதை குறிப்பிடவில்லை. அதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டனவா? என்பதையும் குறிப்பிடவில்லை. முதல் அத்தியாயத்தில் தமிழகத்தில் இருந்த இரும்பின் பயன்பாடு தமிழகத்தில் புதிய கற்காலத்தில் மிக மெதுவாகப் புகுந்து பின்னர் இரும்புக் காலத்தில் அதிக அளவில் புழக்கத்திற்கு வந்துள்ளதை சுட்டிக்காட்டுகின்றார். பெரும்பாலும் இரும்புக் காலப்பண்பாடு சிற்றாறுகளும் காட்டாறுகளும் மலைகளும் மிகுந்த தர்மபுரி, வடஆற்காடு (இன்றைய வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்) மிகுந்திருந்ததை விளக்குகின்றார். மேலும் சங்க இலக்கியங்கள் சுட்டும் இரும்புக் கருவிகள், இரும்பின் பயன்பாடு, இரும்பின் பல்வேறு பெயர்கள் ஆகியவற்றை

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us