முகப்பு » கட்டுரைகள் » ஜைனவியல் கட்டுரைத்

ஜைனவியல் கட்டுரைத் திரட்டு

விலைரூ.100

ஆசிரியர் : சி.ரே.தன்யகுமார்

வெளியீடு: ஜைன இளைஞர் மன்றம்

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை
ஜைன இளைஞர் மன்றம், 5, தெற்கு போக் ரோடு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 190).

"சமண சமயம் தமிழகத்தில் சிறப்புற்று முன்பு விளங்கியது. அரசியலில் மட்டும் அன்று; கல்வித் துறையிலும் அறிவுத் துறையிலும் தான். சமணர் காலமே தமிழ் நாகரிகத்தின் பொற்காலம் என்று மொழி அறிஞர் கால்டுவெல் கூறியுள்ளதை இந்த நூல் ஆதாரங்களுடன் நிரூபிக்கிறது.கொல்லாமை, புலால் மறுத்தல், பிறரைத் துன்புறுத் தாமை, சமூக சமத்துவம், பெண் சமத்துவம், சமய சகிப்பு, கல்வி வளர்ச்சி, தமிழ் இலக்கிய இலக்கண வளர்ச்சி ஆகிய இந்தத் தடங்களில் தமிழகத்தை 2000 ஆண்டுகளுக்கு முன் முன்னேற்றியது சமணம் என்பதை இந்நூலின் கட்டுரைகள் சான்றுகளுடன் சாதிக்கின்றன.சிந்து சமவெளி நாகரிகம் சமணமே என்றும், திருக்குறள், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, நீலகேசி முதலிய தமிழ் இலக்கியங்கள் சமண இலக்கியங்களே என்றும் உறுதி செய்கிறார். எண்குணத்தான், ஐந்து அவித்தான், இருள் சேர் இருவினை, போன்ற குறள் பகுதிகளுக்குச் சமணத்திலிருந்து விளக்கம் தந்துள்ளார்.பள்ளிக்கூடம் என்று இன்றும் நாம் அழைக்கும் கல்விச் சாலையின் பெயரை தந்தது சமணம். சைன மதத் துறவியர் இருந்த இடமே "பள்ளிகள்' என்று அழைக்கப்பட்டன. அங்கிருந்து அவர்கள் கல்வி தானம் செய்ததால் தமிழ்ப் பள்ளி என்று அழைக்கப்பட்டிருந்தது. சமணராகிய தமிழ் ஜைனர்களின் மதச் சடங்குகள், கலை வளர்ச்சிகள், பண்பாடு ஒழுக்கங்கள், இவை இன்று நம் கண் முன் வாழும் வடநாட்டு வட்டி வாங்கும் சேட்டுகளாகிய ஜெயின்களிடமிருந்து மாறுபட்டது. தமிழுக்கே உரித்தான தமிழ்ச் சமணத்தின் பழமையும், பெருமையும் இந்த நூலைப் படித்தால் உணர்ந்து போற்றலாம்.

Share this:

வாசகர் கருத்து

jk - chennai,இந்தியா

அந்த கால சமணர் பொற்காலம் தெரிந்துகொள்ள எல்லோரும் படிக்கவேண்டிய புத்தகம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us