கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ. 150
ஒரு துப்பறியும் கதையின் சுவாரசியம்; ஒரு கைதேர்ந்த எழுத்தாளரின் அநாயாசமான பாத்திரப் படைப்பு. அங்கங்கே கதையின்போக்கையும் பாத்திரங்களின் தன்மையையும் சுட்டிக்காட்டும், விரசமில்லாத நகைச்சுவை சம்பாஷணை. ஏக காலத்தில் நிகழும் போட்டா போட்டியான சம்பவங்களைக் குழப்பமில்லாமல் விவரிப்பதில் "தேவனுக்கு' நிகர் "தேவன்'தான். கல்யாணி - சுந்தரம் காதல் நிறைவேறிக் கெட்டி மேளம் கொட்டுவதற்குள் எத்தனை, எத்தனை சம்பவங்கள்! நாகலட்சுமியின் குரூரம், விபுவின் அப்பாவித்தனம், அய்யாசாமியின் சாமர்த்தியம், என்று எத்தனை பேரின் வடிவங்களைத் தம் பேனாவின் வாயிலாக உயிர்ச் சித்திரங்களாக்கியிருக்கிறார் இதில்!"இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பார்களா!' என்று வியக்க வைக்கும் பாத்திரப் படைப்புகள் ஜீவன் ததும்பும் நாவல்களை உருவாக்கித்தந்திருக்கும், "தேவனி'ன் முக்கியமான படைப்பு.