கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ. 75
பிறரது நிலங்களில் இருளர்கள் பணியாற்ற மாட்டார்கள். யாருக்காகவும் எதற்காகவும் தங்கள் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். பணம் மீதும் பொருள் மீதும் பெரும் நாட்டம் இல்லை இவர்களுக்கு. பசியால் கதறியழும் குழந்தைக்கு உணவு கொடுக்க முடியாததால் உயிருடன் குழந்தையைப் புதைத்த இருளர் இனப்பெண்கள் இங்கே உண்டு. பெண்களைக் கொண்டாடும், பெண்மையைப் போற்றும் மரபு
அவர்களுடையது. காதல் திருமணம் சர்வசாதாரணம். இசை மீது தீராத மோகம். சிறிதளவே இருந்தாலும் இருப்பதைப் பகிர்ந்துகொள்ளும் தோழமை. பிறர் உடைமை மீது நாட்டம் கிடையாது. அசாதாரணமான இறை பக்தி. கூர்மையான அறிவாற்றல். கொடிய விலங்குகளையும் சர்வசாதாரணமாக எதிர்கொள்ளும் இருளர்கள், நாகரிக மனிதர்களைக் கண்டால் மட்டும் அஞ்சி பின்வாங்குகிறார்கள். இருளர்
களின் அசாதாரணமான வாழ்க்கை முறையை உள்ளது உள்ளபடி பதிவு செய்கிறது இந்நூல்.