கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ. 60
ஃபெலுடா வீரசாகசக் கதைகளில் "மகாராஜாவின் மோதிரம்' இரண்டாவது புத்தகம். மகாராஜா ஒளரங்கசீப்புக்குச் சொந்தமான புராதனமான மோதிரம் அது. முந்நூறு ஆண்டுகள் பழைமைவாய்ந்த பளபளக்கும் அந்த மோதிரத்தைக் கைப்பற்ற கலைப் பொருள் சேகரிப்பாளர்கள் வட்டமடிக்கிறார்கள். ஒரு நாள் மோதிரம் காணாமல் போகிறது. திருடியது யார்? தபேஷுடன் லக்னோவுக்குச் சுற்றுலா வரும்
ஃபெலுடா, துப்பறியத் தொடங்குகிறார். மோதிரம் கிடைக்காத திருடர்கள் மறைவாக அவரைப் பின்தொடர்கிறார்கள். வரலாற்று சிறப்புமிக்க அந்த மோதிரம் கிடைத்ததா? ஃபெலுடா துப்பறிவதில் வெற்றிபெற்றாரா?