கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ. 100
ஒரு பக்கம் போர். தேசங்களுக்கு இடையிலும் மக்களுக்கு இடையிலும். மனிதத்தையும் அமைதியையும் வளர்க்கவேண்டிய கிறிஸ்தவபாதிரிகள் பிளவுகளை மட்டுமே ஏற்படுத்திக்கொண்டி ருந்தார்கள். இந்த சீரழிந்த 18-ம் நூற்றாண்டு சமூகத்துக்கு உயிர் கொடுக்க ஒரே ஒரு சக்தியால்தான் முடியும் என்று நம்பினார் வோல்ட்டேர். மனித நேயம். வோல்ட்டேர்தொடுத்ததும் ஒரு வகையில் போர்தான். மனித நேயத்துக்கு விரோதமாக நடந்து கொள்ளும் எவர் ஒருவரையும் அவர் பேனா விட்டுவைக்கவில்லை. கிண்டல். எள்ளல். கடுமை. மூன்றும் கலந்த விநோதமான தாக்குதல் அது. இந்த நாவல் எழுதப்பட்டு 250 ஆண்டுகள் கழிந்துவிட்டன என்றாலும் நிலைமை இன்று அதிகம் மாறிவிடவில்லை. அதே போர். அதே தனி மனிதத் தாக்குதல். புதர் போல் பெருகிக்கிடக்கு ம் வெறுப்பு. விரோதம். ஓர் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் கேண்டீடின் கதையை வாசித்துப் பாருங்கள். மனித குலத்தை நேசிக்கக் கற்றுக்கொடுக்கும் அற்புத காவியம் இது.