கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ. 100
அன்பு, நேசம் போன்ற மனிதப் பண்புகளை முன்வைத்து கிறிஸ்தவம் முதன் முறையாக அறிமுகமான போது, மிகக் கடுமையான எதிர்ப்பு களை சந்திக்க வேண்டியிருந்தது. உலகின் மிகப் பழைமையான மதங்களோடும் நம்பிக்கைக ளோடும் போரிட வேண்டியிருந்தது.வேறு ஒரு மதமாக இருந்திருந்தால், இந்நேரம் இருந்த சுவடே இல்லாமல் உதிர்ந்து போயிருக்கும். கிறிஸ்தவம் அசரவில்லை. ஒரு
காட்டுச்செடியைப்போல் முட்டி மோதி துளிர்த்து வேர்விட ஆரம்பித்தது. இன்று ஒரு பெரும் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. மதங்களை சமரசமற்ற வரலாற்றுப் பார்வையோடு அணுகி ஆராயும்போது, பல புதிய வெளிச்சங்கள் புலப்படுகின்றன. கிறிஸ்தவ மதப் புத்தகங்கள் முன்வைக்கும் வரலாற்றோடு, பல இடங்களில் இந்தப் புத்தகம் மாறுபடுவதற்கு இதுவும் ஒரு காரணம். கிறிஸ்தவத்தின் தோற்றம், வளர்ச்சி,
பிரிவுகள், தத்துவங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய எளிமையான ஆவணம் இந்நூல்.