கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604. பக்கம் : 80
இவ்வளவு பெரிய கணித மேதை தானா கவே கணிதத்தைக் கற்றுக்கொண்டார் என்பது நம்ப முடியாத ஆச்சரியம். கல்லூரியில் கணிதத்தைத் தவிர, மற்ற அனைத்துப் பாடங்களிலும் தோல்வியைத் தழுவியவர் ராமானுஜன் என்பது கூடுதல் ஆச்சரியம். "நம்பர் தியரி' என்ற கணிதத் துறையில் அவர் செய்த ஆராய்ச்சிகள், இன்றுவரை பல ஆராய்ச்சியாளர்களைத் திக்குமுக்காடச் செய்துவருகின்றன. மிகக் குறுகிய வாழ்க்கையில் அவர் செய்த சாதனைகள் என்ன? ஏழைமைச் சூழலில் பிறந்த மேதை, வெற்றிப் படிகளை எட்டிப் பிடித்தது எப்படி? ஒரு மிகப் பெரிய கணித மேதையின் வாழ்க்கையை அழகாக விவரிக்கிறது இந்நூல்.