பக்கம் : 176
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604
பருப்பு இல்லாமல் கல்யாணம் கிடையாது என்பார்களே அதுமாதிரி அனுமன் இல்லாமல் ராமாயணக் காவியமே கிடையாது. ராமனுக்கு உதவியாக "அசிஸ்டெண்ட்' ரோல்தான் செய்கிறார் அனுமன் என்று தோன்ற லாம். உண்மையில் சரணாகதி பக்தியின் விஸ்வரூபம் அந்த நிலை! அவதாரப் புருஷர்களான ராமன், கிருஷ்ணன் போன்றவர்களுக்குக்கூட வாழும் காலங்கள் என்று ஒன்று உண்டு. ஆனால், அனுமன் காலத்தைக் கடந்த சிரஞ்சீவி. இந்நூல் அனுமனின் குழந்தைப் பருவம், இளமைத் துள்ளல், பண்பட்ட பராக்கிரமம் என்று எல்லாவற்றையும் எளிய தமிழில் விறுவிறுப்புடன் சொல்லிக்கொண்டு போகிறது. அனுமன் பற்றி முழுதும் அறிந்துகொண்ட திருப்தி தருகிறது. நூலாசிரியர் பிரபுசங்கர், பிரபல பத்திரிகை யாளர். "குமுதம் பக்தி' இதழில் பல ஆண்டு காலம் பணியாற்றியவர்.