ஆங்கிலத்தில் எழுதியவர்: ஜான் டி.மர்பி. தமிழாக்கம்: டாக்டர் என்.ரமணி. வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-ப, சிட்கோ இண்டஸ்ட்ரி யல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 318. விலை: ரூ.150)
மனிதன் வாழ்வில் வெற்றி கொள்ள அடிப்படைத் தேவை என்னென்ன, மன ரீதியாக எப்படித் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். திறமை மீது எப்படி நம்பிக்கை கொள்வது. தடைகளை எப்படிச் சாதகமாக்கிக் கொள்வது. அச்சத்தை ஒட்டு மொத்தமாக தூக்கி எறிவது எப்படி. நட்பை வளர்த்துக் கொள்வது எப்படி. சுறுசுறுப்பாய் செயல்படும் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி. வாழ்க்கையில் முன்னேற உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்பது குறித்து நல்ல முறையில் எடுத்துக் கூறுகிறது இந்நூல். எல்லாவற்றுக்கும் மேலாக பிரச்னையில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் அதிலிருந்து வெளிவருவது எப்படி என்பதையும் விளக்குகிறது. முன்னேற ஆசைப்படுபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.