முகப்பு » வாழ்க்கை வரலாறு » தி லெஜண்டரி ஜி.என்.பி.,

தி லெஜண்டரி ஜி.என்.பி.,

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: ஸ்ரீகிருஷ்ண கான சபா

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை
மகாராஜபுரம் சந்தானம் சாலை, தி.நகர், சென்னை-17.

ஜி.என்.பி.,யின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரை கவுரவிக்க கிருஷ்ண கான சபாவின் காணிக்கையாக மலர்ந்துள்ளது இப்புத்தகம்) போன்: 2826 4493 . மொபைல்: 98400-72821. (பக்கம்: 132. விலை: குறிப்பிடப்படவில்லை) வாழ்ந்து மறைந்த கலைஞர்கள் பலர் இருப்பினும், ஒரு சிலரே இன்று வரை வாழும் கலைஞர்களாக போற்றப்படுகின்றனர். அவர்களில் முதன்மையானவர் ஜி.என்.பி., பாடகர், இசை அமைப்பாளர், நடிகர், வாக்கேயகாரர்,சக்தி உபாசகர், சிறந்த ஆசான், நல்ல மனிதர் என்று தன்னகத்தே பல முகங்களைக் கொண்டு தன்னிடம் உள்ள இசையால் இவ்வுலகை வசப்படுத்தியவர் என்பதை மெய்பிக்கும் வகையில், இப்புத்தகம் பல அரிய செய்திகளை உண்டாக்கி மலர்ந்துள்ளது.
ஸ்ரீகிருஷ்ண கான சபாவின், முதன்மை காரியதரிசி ஒய்.பிரபுவின் கட்டுரையில் இருந்து இசைக் கலா ரசிகர்களுக்கு பொக்கிஷமாய் பாதுகாக்க பல அரிய புகைப்படங்கள் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன.
அவரது பிரதான சிஷ்யை எம்.எல்.வி.,யின் முதல் கட்டுரையிலேயே ஜி.என்.பி.,யின் இசைப் புலமையை கூறி இருப்பதால், இவரைப் பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு கண்ணாடி போல் விளங்குகிறது.
சங்கீத செய்திகளை, சமுதாயத்திற்கு கொடுத்து, சீரிய சாதனை படைத்து வரும் பத்திரிகைகள், நாளேடுகள் அவற்றில் வெளிவந்த கட்டுரைகள், அவர் அளித்த பேட்டிகள் எல்லாமே படிக்க மிக சுவாரஸ்யமாகவும், நல்ல அமைப்புடன் காணப்படுகின்றன. கலா ரசிகர்களுக்கு இப்புத்தகம் ஒரு காலக்கண்ணாடி என்பதில் ஐயமில்லை.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us