நியூ ஹொரைசான் மீடியா (பி)லிட்., சென்னை-18. (பக்கம்:144)
உயிர் இறைப்பொருளில் ஒடுங்குகிறது. இதுவே "ஒழிவில் ஒடுக்கம் ஆகும். இந்தத் தமிழ்ச் சித்தாந்த தத்துவம் வடமொழியில் வேதங்களாகப் பேசப்பட்டது. அந்த வேதங்களின் கூறுகளாகவும் விளக்கங்களாகவும் உப நிடத நூல்கள் அமைந்துள்ளன. இவற்றுள் ஒன்றான சாந்தோக்ய உபநிடதம், காலம் காலமாக எல்லாரும் கேட்கும் கேள்வியாகிய, "நான் யார்? என்பதையும் அதன் விடையாகிய "தத்வமசி என்பதையும் உணர்த்துவதாக உள்ளது. இதில், அமைந்துள்ள "நான் யார்? என்ற தலைப்புடைய முன்னுரை, வாசிப்பில் ஆர்வத்தைத் தூண்டுகிறது; தத்துவ விசாரம் என்பது ஏதோ புரியாத ஒன்று என்ற எண்ணத்தைச் சாதாரண வாசகனின் மனத்தை விட்டு நீக்கிவிடுகிறது; வாசிப்பை விரைவு படுத்துகிறது. நூலைக் கீழே வைக்க மனமில்லாமல் படிக்க வைக்கிறது. நூலின் கட்டமைப்பும் தாளின் தரமும் அச்சின் சீர்மையும் பாராட்டத்தக்கதாய் உள்ளன.