விஜயா பப்ளிகேஷன்ஸ், 15- பாளையக்காரன் தெரு, கலைமகள் நகர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-32. (பக்கம்: 196 )
தொண்டை நாட்டில் அமைந்துள்ள வைணவத் திருத்தலங்களின் வரலாறு, கோவில்களின் அமைப்பு, எழுந்தருளியுள்ள தெய்வங்களின் தொடர்புடைய தகவல்கள் விவரங்கள், சிறப்பியல்புகளை எடுத்தியம்பும் நூல். பதின்மூன்று திவ்ய தேசங்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ள "வைணவ சமயத்தின் தோற்றமும் வளர்ச்சியும் மற்றும் "பன்னிரு ஆழ்வார்கள் என்ற தலைப்பில் சில பயனுள்ள குறிப்புகள் அடங்கிய இரண்டு கட்டுரைகளும், நூலுக்குச் சிறப்பு சேர்க்கின்றன. நூலாசிரியர் சென்னையில் உள்ள பிரபல உயர்நிலைப் பள்ளியில், தமிழாசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்துதர்ம மன்றம் என்ற அமைப்பில் செயலராக இருந்தவாறு ஆன்மிகப் பணிபுரியும் அன்பர். இது ஒரு சிறந்த புத்தகம்.