விலைரூ.100
முகப்பு » வாழ்க்கை வரலாறு » பெரியாரின் புரட்சி
புத்தகங்கள்
பெரியாரின் புரட்சி முகங்கள்
விலைரூ.100
ஆசிரியர் : வெள்ளையாம்பட்டு சுந்தரம்
வெளியீடு: சேகர் பதிப்பகம்
பகுதி: வாழ்க்கை வரலாறு
Rating
சேகர் பதிப்பகம், (பக்கம்: 192)
ஜாதி, மதங்களின் பெயரால் சமுதாயம் சீரழிந்து பாதிக்கும் நிலையிலேயே அதை மோதித் தடுத்து சீர்திருத்தம் செய்து புதிய பாதை காட்டியவர் ஈ.வெ.ரா., இவரது வாழ்வை மிக அழகாக, இந்நூலில் எழுதியுள்ளார் வெள்ளையாம்பட்டு சுந்தரம். மொத்தம் 30 தலைப்புகளில் பெரியாரின் வாழ்வும், புரட்சிக் கருத்துக்களும் வரிசைப்பட்டு நிற்கின்றன. அவரது பெற்றோர் வெங்கட்ட நாயக்கர், சின்னத் தாயம்மாள் படம் நூலுக்குப் பெருமை சேர்க்கிறது.
"ராமா! ராமா! என்று சிறு வயதில் செல்லமாக ஈ.வெ.ரா.,வை அவரது தந்தையார் அழைத்து, ஒருமுறை அவர் செய்த குறும்புக்காக அடித்து விட்டார். இதனால் அவர், தந்தையிடம் தைரியமாக கேள்வி கேட்டு அவர் மனதை மாற்றினார். ""சாப்பாட்டில் ஜாதி பேதம் காட்டுவது அன்று முதல் அவர் வீட்டில் ஒழிந்தது என்ற சம்பவம் படிப்பவரை பரவசப்படுத்துகிறது. திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளும் ஆகி நாகம்மையாருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்த பிறகு ஈ.வெ.ரா., ஒரு நாள் சாமியாராகி காசிக்குச் சென்று விட்டார். பிறகு வந்து காங்கிரசில் சேர்ந்து போராடினார். கதர் துணிகளை ஊர் ஊராகச் சென்று விற்றார். சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றைத் துவங்கி, 94 வயது வரை செய்த தொண்டுகளை இந்த நூல் சிறப்பாகக் காட்டுகிறது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!