விலைரூ.200
முகப்பு » வாழ்க்கை வரலாறு » ஒளியின் நிழல்
புத்தகங்கள்
ஒளியின் நிழல்
விலைரூ.200
ஆசிரியர் : தினகர் ஜோஷி
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பகுதி: வாழ்க்கை வரலாறு
Rating
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட் 41-பி, - சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் அம்பத்தூர், சென்னை - 98. ( போன் : 26359906) (பக்கம் : 390)
மகாத்மா காந்தி சத்யசோதனை மூலம் தன்னைப் பற்றிய எல்லா விவரங்களையும் ஒளிவு மறைவின்றி வெளியிட்டவர். ஆனால் அவர் குடும்பத்தின் நிலை எப்படி? அதை இந்த நூல் விளக்குகிறது. குறிப்பாக காந்தி அவர்களின் மூத்த மகன் ஹரிலால் வாழ்க்கை இங்கே படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. குடிப்பழக்கம், விலைமாதருடன் தொடர்பு, தன்னம்பிக்கை இழந்த வாழ்வு ஆகியவை ஹரிலால் வாழ்வின் முக்கிய அம்சங்கள். அதற்கு அடையாளமாக, அதிக விரக்தியில் ஹரிலால் தன் தந்தை பாபுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் காணப்படும் பகுதி இதோ. "நம்மிருவருக்கும் இருக்கும் கருத்து வேறுபாடு ஒன்றும் புதிதல்ல. நீங்கள் எனக்கும் எனது தம்பிமார்களுக்கும் உரிய சரியான பயிற்சி கொடுத்திருப்பதாக, நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
உங்களை அறியாமலேயே நீங்கள் எங்களை சரியாக கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது. (பக் 194) இப்படி ஒரு நீண்ட கடிதம் எழுதிய ஹரிலால் தன் அன்னையை எப்படி அவர் நடத்தினார் என்பதையும் பதிவு செய்திருக்கிறார். முரண்பட்ட வாழ்வில் சிக்கி ஹரிலால்பட்ட சிரமங்களுக்குப் பின் அவர் மீண்டும் மணம் செய்து கொள்ள விரும்பி தந்தை காந்திக்கு கடிதம் எழுதினார். அந்த மறுமணம் என்பது ஒரு விதவையுடன் இருக்க வேண்டும் என்பது காந்தி கருத்து. அத்துடன் அவர் தன்னுடன் இருக்கும் மகாதேவ் தேசாயிடம், "" மகாதேவ்! நான் இன்னமும் ஹரிலாலை மிகவும் நேசிக்கிறேன், கீதையை நன்கு வழிபடுபவராயினும் தன் மகன் என்ற உணர்ச்சியை எந்த தகப்பனாராலும் விட முடியவில்லை என்று கூறியுள்ளார். (பக்கம் 321) .ஆனால் ஹரிலாலுக்கு பதில் எழுதிய பின் நாடு குறித்த சிந்தனையில் ஆழ்ந்தார் மகாத்மா.
இப்படி பல தகவல்கள் கொண்ட நூல், மொழிபெயர்ப்பும் எளிதாகப் புரியும் வகையில் அமைந்திருக்கிறது. மகாத்மா நாட்டிற்காக வாழ்ந்தார் என்றால், அவர் வீட்டில் இருந்தவர்கள் கதி என்ன என்பதை இதைப் படிப்பவர்கள் உணர முடியும். சுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸ் கட்சியை அவர் கலைத்துவிடச் சொன்னதற்கு இப்புத்தகத்தின் பல பகுதிகளைப் படிக்கும் போது பலருக்கும் வித்தியாசமான அர்த்தங்கள் புரியும். மகாத்மா காந்தி மறைவுக்கு நாடே கண்ணீர் விட்ட போது, ஹரிலால் மறைவு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை காலத்தோடு கரைந்து விட்டது. மொத்தத்தில் வரலாற்றுடன் ஒட்டிய தகவல்களை அறிய விரும்பும் அனைவரும் விரும்பிப் படிக்கலாம்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!