விலைரூ.100
முகப்பு » வாழ்க்கை வரலாறு » சட்ட மேதை அண்ணல்
புத்தகங்கள்
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர்
விலைரூ.100
ஆசிரியர் : பதிப்பக வெளியீடு
வெளியீடு: வசந்தா பதிப்பகம்
பகுதி: வாழ்க்கை வரலாறு
Rating
வசந்தா பதிப்பகம், 26, குறுக்குத் தெரு, ஜோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை-88. (பக்கம்: 176).
இந்திய மக்களில் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காகவும், மறுவாழ்விற்காகவும், அரும்பாடுபட்ட அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு பற்றிப் பல நூல்கள் வந்திருக்கின்றன. அவர் எப்படி படிப்படியாக, அரசியல் அமைப்புச் சட்டம் தயாரிக்கும் வரைவுக் குழுவில் உறுப்பினராகவும், பிறகு அதன் தலைவராகவும் ஆனார் என்பது பற்றியும், இந்திய பார்லிமென்ட் உறுப்பினர்களும், உலகின் பல சிறந்த தலைவர்களும் ஒரு சேர மெச்சிக் கொண்டாடும் வகையிலான இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க அவர் பட்ட அரும்பாடுகளையும் மிகச் சிறப்பாக விவரித்து இந்த நூலை எழுதியுள்ளார் டாக்டர் எச்.வி.ஹண்டே.
அம்பேத்கரின் வரலாற்று அறிவு, சாசன சபையில் அவர் நிகழ்த்திய வியப்பூட்டும் விவாதங்கள், சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் சம நோக்குடன் ஒருங்கிணைத்து நோக்கிய பண்பு, வெளிப்படையான செயற்பாடுகள் என ஒவ்வொன்றையும் நுணுகி ஆராய்ந்து விவரிக்கிறது நூல். முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பாராட்டி, அணிந்துரை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!