விலைரூ.80
முகப்பு » வாழ்க்கை வரலாறு » பாரதியின் பேரறிவு
புத்தகங்கள்
பாரதியின் பேரறிவு
விலைரூ.80
ஆசிரியர் : இரா.இராமமூர்த்தி
வெளியீடு: வசந்த ஸ்ரீ பதிப்பகம்
பகுதி: வாழ்க்கை வரலாறு
Rating
---28, சி.கல்யாண் அடுக்ககம், ரயில் நிலையச் சாலை, ஆலந்தூர்,
சென்னை -16.(பக்கம்: 160, விலை: ரூ.80)
அமரகவி பாரதியின் எழுத்துக்களும், பாரதி நினைவுகளும் நிரந்தரமானவை. தமிழ் மொழி உள்ளவரை, தமிழ்நெஞ்சம் மறக்கவே இயலாதவைகளும் பாரதி ஞாபகங்களுக்கும் இடமுண்டு. மொழிப்பற்றும், தமிழின உணர்வும் உள்ள, "பாரதி இலக்கியச் செல்வர் இந்நூலின் வாயிலாக பாரதியின், பன்முகத் திறமையின் வெளிபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். பாரதி எல்லா மொழிகளையும் நேசித்த தமிழ்க்கவிஞர்.
பாரதி எல்லா உயிர்களையும் நேசித்த மனிதாபிமானி. பாரதி இயற்கையை உபாசித்த வேதஞானி. தேசப்பற்றுக்கு பாரதியை மட்டுமே நல்ல உதாரணமாகக் கூறலாம். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட பாரதியை, இந்நூலில் நமக்கு அறிமுகம் செய்கிறார் நூலாசிரியர். ஏற்கெனவே தெரிந்த பல விஷயங்களுடன், தெரியாத பல விஷயங்களையும் நமக்கு வழங்கியிருக்கிறார். பாரதி அறிஞர், பாரதி அன்பர்களுக்கு நல் விருந்தாக அமைந்துள்ள புத்தகம் இது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!