விலைரூ.120
முகப்பு » வாழ்க்கை வரலாறு » வண்டமிழ் வளர்த்த
புத்தகங்கள்
வண்டமிழ் வளர்த்த வரதராசனார்
விலைரூ.120
ஆசிரியர் : முனைவர் அ. ஆறுமுகம்
வெளியீடு: பாவேந்தர் பதிப்பகம்
பகுதி: வாழ்க்கை வரலாறு
Rating
நடுத் தெரு
திருமழபாடி- 621851. பக்கம் : 272
"முன்னேற வழிகாட்டி எனப் போற்றுமாறு வாழ்ந்த முனைவர் மு.வரதராசனார் அவர்கள், மு.வ., என்று சுட்டப்பெறும் தமிழ்ப்பேரறிஞர் ஆவார். அவர்தம் நூற்றாண்டு விழா அண்மையில் கொண்டாடப் பெற்றது. இந்நூல் மு.வ., அவர்களின் நூற்றாண்டுப் படையலாய் எழுதப்பெற்றுள்ளது. மு.வ., அவர்களின் பண்பு நலன்களையும், வாழ்க்கை முறைச் சிறப்புகளையும் மிக விரிவாக வழங்கியுள்ளார் நூலாசிரியர்.
மு.வ., அவர்கள் எழுதியுள்ள புதினங்களின் (நாவல்களின்) பெயர்களைக் குறிப்பிட்டு, அவற்றின் சிறப்புகளை விளக்கும் போது, புதினப்பாத்திரங்களின் கூற்றுகளை மாற்றாமல், அப்படி அப்படியே வெளியிட்டுள்ளார். கட்டுரை நூல்களில் உள்ள தலைப்புகளைப் பட்டியலிட்டு வழங்கியுள்ளார். மு.வ., அவர்களின் நூல்கள் வெளிவந்த ஆண்டுகளைச் சுட்டிச்செல்கிறார். மு.வ., அவர்களைப் பற்றி எழுதும் நூலாசிரியர் இடையிடையே, தம் வரலாற்றையும் பின்னிப் பிணைத்துள்ளார். மு.வ., அவர்கள் இயற்கையெய்திய பின், அவரைப் போற்றித் தமிழறிஞர்கள் பாடிய பாடல்களும், கருத்துகளும் இறுதிக் கட்டுரையில் சேர்க்கப் பெற்றுள்ளன.
"தோழர் வரதராசனார் ஒரு கலைக்கழகம் எனத் திரு.வி.க., அவர்களால் பாராட்டப்பெற்ற மு.வ., அவர்கள் கூறியுள்ள, "மக்களாய்த் தோன்றுவாரின் தொகை பெருகியுள்ளதே அல்லாமல், மக்களாய் வாழ்வோரின் தொகை பெருகவில்லை என்னும் கருத்து இன்றும் பொருந்தும். மு.வ., அவர்களை முழுமையாகப் படம் பிடித்துக்காட்டும் சிறந்த நூல். மு.வ., அவர்களோடு பழகியுள்ள யான் நூலாசிரியரைப் பாராட்டுகிறேன்.
அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய சிறந்த நூல்
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!