விலைரூ.350
முகப்பு » வாழ்க்கை வரலாறு » தந்தை பெரியார்
புத்தகங்கள்
தந்தை பெரியார்
விலைரூ.350
ஆசிரியர் : கவிஞர் கருணானந்தம்
வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ்
பகுதி: வாழ்க்கை வரலாறு
Rating
பக்கம்: 613
தந்தை பெரியார், ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு வாழ்ந்து, தமிழக வரலாற்றில் மிகப்பெரிய சமூக மாற்றங்களுக்கு மூல ஊற்றாகத் திகழ்ந்தவர் என்பது அனைவரும் அறிந்தது. அவருடைய முழுமையான வாழ்க்கை வரலாற்றை இன்றைய தலைமுறையினர் அறிய உதவும் மிகச்சிறந்த நூல் இது எனலாம். பெரியார் வாழும்போதே, அவருடைய வரலாற்றினை சாமி சிதம்பரனார் எழுதி வெளியிட்ட நூல் ஒன்று உண்டு என்றாலும், அது 1940களுடன் உள்ள சம்பவங்களையே விவரித்தது.
அதன் பிறகு, அவர் வாழ்ந்து மறைந்த காலம் வரை நிகழ்ந்த சம்பவங்களையும் சேர்த்து, எழுதப்பெற்ற விரிவான நூல் இது. தோற்றம் முதல் மறைவு வரை பெரியார் வாழ்க்கையின் நிகழ்வுகளைக் கால வரிசையில் மிகச்சிறப்பாகத் தொகுத்துள்ளார் கவிஞர் கருணானந்தம். பெரியார் வரலாற்றை முழுமையாக அறிய விரும்புவோருக்கும், ஆய்வு செய்ய விரும்புவோருக்கும், உண்மையான செய்திகளை ஆதாரத்துடன் அளிக்கும் அரிய வரலாற்று நூலாக இது அமைந்துள்ளது
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!