விலைரூ.95
புத்தகங்கள்
பரதகண்ட புராதனம்
விலைரூ.95
ஆசிரியர் : பொ.வேல்சாமி
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பகுதி: தமிழ்மொழி
Rating
பக்கம்: 136
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதி பாதிரியார் கால்டுவெல் எழுதிய தமிழ் நூல் என, இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. வேதங்கள், வியாச பாரதம், வால்மீகி ராமாயணம் ஆகியவை பற்றிய விளக்கங்களும், விமர்சனங்களும் இந்நூலில் உள்ளன. இந்து மதம் பற்றிய இவரது கருத்துகள் ஏற்புடையனவா என்பது வாசகர், தம் மனப்பாங்கைப் பொறுத்தது. சமஸ்கிருத மொழி இலக்கிய வரலாறும், ஒருவாறு நூலில் இடம் பெற்றுள்ளது.பாரதம் பற்றி, "யூரோப் சாஸ்திரிகள் (அறிஞர்கள்) ஆய்ந்துரைத்தவை சரியானவை. என்னும், ""இத்தேசத்து (இந்திய) வித்துவான்களுக்கு நன்றாய்த் தெரியாது என்றும் எழுதியுள்ளார்.
பகவத் கீதையின் உள்ளடக்கம் பற்றிச் சொல்லும்போது, ""அது நஞ்சைத் தேனில் கலந்து கொடுப்பது போல் உள்ளது என்றும், ""கிருஷ்ணன் போதித்த கொடுமையான ஞானத்தைப் பார்க்கிலும் அர்ஜுனனிடத்தில் காணப்பட்ட மனுஷீக இரக்கம் நல்லது என்றும், இப்படிப் பல கருத்துக்களை எழுதியுள்ளார்.""பிரம வைவர்த்த புராணம் பால கிருஷ்ணனாகிய கோபாலனையும், அவனுடைய கள்ள நாயகியாகிய ராதாவையும் புகழும் புராணமே அல்லாமல், சூரிய புராணமல்ல மச்சி புராணத்துள் வரும் ஜலப்பிரளயம் ""பைபிளென்னும் வேதாகமத்தில் சொல்லியிருக்கிற ஜலப்பிரளயமே, அந்தக் கதைக்குக் காரணமென்று விளங்கும்தக்சன் யாகம் பற்றி எழுதும் இடத்தில், தசீதி ரிஷியாகசாலைக்கு வந்து பேசுமிடத்தில், "சிவனே பரமகர்த்தனென்றும், அவர் செய்தஅயோக்கிய கிரியைகள் திருவிளையாடல்லாமல் வேறல்லவென்றும் எழுதியிருப்பது போல், நூலின் பற்பல இடங்களில் இந்தப் பாதிரியாரின், இந்து மதத் துவேஷம் வெளிப்படுகிறது.
வாசகர் கருத்து
ASHOK - MADURAI,இந்தியா
NICE
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!