விலைரூ.110
புத்தகங்கள்
தனிப்பாடல் திரட்டில் இன்சுவைக் காட்சிகள்
விலைரூ.110
ஆசிரியர் : சரளா ராஜகோபாலன்
வெளியீடு: ஒளிப்பதிப்பகம்
பகுதி: பொது
Rating
பக்கம்: 176
கவிதை வாழ்வைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. கவிஞர்கள், தங்கள் அனுபவங்களைத் தனிப் பாடல்களில் பதிவு செய்துள்ளனர்.ஒவ்வொரு தனிப் பாடலுக்கும், ஒரு கதைப் பின்னணியும், வரலாறும் இந்த நூலில் விரிவாக, சுவையாகத் தரப்பட்டுள்ளது.நக்கீரரின் குறுந்தொகைப் பாடலில், கூந்தலுக்கு, இயற்கை வாசம் உண்டா என்ற பாடலுடன் நூல் துவங்குகிறது.
இரட்டைப் புலவர்கள், துறைமங்கலம் சிவப்பிரகாசர், அதிவீரராம பாண்டியர், படிக்காசுத் தம்பிரான், பலபட்டடைச் சொக்கநாதர், நமச்சிவாயப் புலவர், சுப்ரதீபக் கவிராயர், ராமச்சந்திர கவிராயர், ராம கவிராயர் என்ற பல புலவர்களின் வாழ்வில் நிகழ்ந்த சுவையான சம்பவங்களை, இந்த நூலில் படித்து மகிழலாம். ஒவ்வொரு தனிப்பாடலும் ஒவ்வொரு கதை தேடித் தருகிறது.சில இடங்களில் பாடலே இல்லாமல், வெறும் விளக்கமே உள்ளதும், ஒரே பாடலை இரு தலைப்புகளில், 97, 100 இரு வேறு விளக்கமாகத் தந்திருப்பதும், அடுத்த பதிப்பில் திருத்தப்பட வேண்டும்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!