விலைரூ.400
புத்தகங்கள்
Rating
பக்கம்: 790
அரசூர் வம்சம் என்ற ஒரு நாவல் மூலம், தமிழ் நாவல் வாசகர்களின் கவனத்தை கவர்ந்த ரா. முருகன், அதன் தொடர்ச்சியாக இந்தப் பெரிய நாவலை எழுதியிருக்கிறார். நாவலின் தமிழ்நடை, சுஜாதாவை ஞாபகப்படுத்துகிறது. மிகப் பெரிய கதைக்களம், நிறைய கதாபாத்திரங்கள், அதிக சம்பவங்கள், நிகழ்ச்சிகள் என, நாவல் வாசகனை அசத்துகிறது. மூன்று நாடுகள், எட்டு ஊர்கள், நான்கு கலாசாரச் சூழல்கள் ஊடே 6 இழைகளாக கடந்து போகும் இந்தக் கதையை படித்து முடிக்க நான்கு நாளாவது, ஆபீசுக்கு லீவு போட வேண்டும். அல்லது "ரிடையர்மென்ட் ஆன பின் படிக்க அமர வேண்டும். நேரத்தை ஒதுக்க வசதியும், நாவல் படிக்கும் ஆசையும் ஒரு சேர வாய்க்கப் பெற்ற வாசகர்களுக்கு, இதை விட நல்ல நாவல் கிடைப்பது அரிது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!