வைணவ பக்தி நூல்களில் தலைசிறந்தது, நாலாயிரத் திவ்யப் பிரபந்தமாகும். அந்நூலின் பாசுரங்களுக்கு பலர் உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகளில் மிகச் சிறந்தது, பெரியவாச்சான் பிள்ளையின் உரை என்பர் பெரியோர். அவ்வுரையை, இன்றைய இளைஞர்கள் பலரால் படித்துப் பொருள் உணர்வது கடினம்; காரணம், அவ்வுரை வடமொழி கலந்த மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளது. பழகு தமிழில், சுஜாதா இந்நூலை, 68 பாசுரங்களுக்கு மிக எளிமையாக உரை எழுதியுள்ளார்; படிப்பதற்கு சுவையாக உள்ளது.
டாக்டர் கலியன் சம்பத்து