நூலாசிரியர்: கபிலன் வைரமுத்து
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
044–4200 9603
பக்கம்: 152 விலை:
முதன்முறையாக, தொலைக்காட்சி ஊடகத்தில் நடைபெறும் கதை சூழலை கொண்ட நாவல் என்ற அறிமுகத்தோடு, இந்த நூல் பரிச்சயமாகிறது. ஆங்கில சொற்களுக்கு, தமிழில் பெயர் சூட்டுதல் ஒரு கலை; ஆசிரியருக்கு, அது கைவரப் பெற்றிருக்கிறது.
தொலைக்காட்சி படத் தொகுப்பாளர், டெரன்ஸ் பாலின் அனுபவங்களில் ககை நகர்கிறது. டைரி போல, கதை நாயகனும், தன் அனுபவங்களைக் காட்சித் தொகுப்பாக ஆவணப்படுத்தி வைத்திருக்கிறான். இரண்டு ஆண்டுகளாக சேகரித்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ள, முக்கிய நிகழ்வுகளுக்கு, அதற்கான சூழலையும், காரணத்தையும், ஒலி அமைப்பில் சேர்க்கிறான்; கதை நகர்கிறது.
புதிய களத்தில் பயணிப்பதால், துவக்கத்திலேயே, இந்த நூல், வித்தியாசத்தோடு அறிமுகமாகிறது; முடிவு வரை, அதன் ஈர்ப்பு குறையாமல், அழைத்து செல்லப்பட்டிருக்கிறது. வாசகனின் பார்வையில், வார்த்தை பிடிமானங்கள் நழுவும்; ஆனாலும், வரவேற்க வேண்டிய நாவல்.
– சுரேஷ்