நக்கீரர், கபிலர், அவ்வை, கம்பன், பாரதி, வ.உ.சி., கவிமணி, பெரியார், லெனின், உமர் கய்யாம் முதலான கவிஞர்களையும், அறிஞர்களையும் பார்த்தும், படித்தும், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ப.ஜீவானந்தம் பெற்ற அனுபவங்களின் தொகுப்பு தான் இந்த நூல். 56 தலைப்புகளில், 56 அறிஞர்களை நமக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் ஜீவா. அவரின் உரைகள், புத்தக மதிப்புரைகள், அணிந்துரைகள் முதலானவற்றின் தொகுப்பை, உள்ளது உள்ளபடி நமக்கு தொகுத்து தந்துள்ளார், நூலாசிரியர் ஜீவபாரதி. பிறர் தொகுத்த தொகுப்பிலிருந்து எடுத்து பயன்படுத்தும்போது, அந்தத் தொகுப்பை வழங்கிய ஆசிரியரின் பெயரையும் குறிப்பிட்டிருப்பது, தொகுப்பாசிரியரின் நேர்மையைக் காட்டுகிறது. ஜீவாவின் இலக்கிய ஆளுமையில், சங்க இலக்கியங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதை, இந்த நூல் தெள்ளத் தெளிவாக்குகிறது.
– முகிலை ராசபாண்டியன்