முருகப் பெருமானின் 1,008 திருநாமங்களுக்கு, இந்த நூல் விளக்கம் அளிக்கிறது. பகழிக்கூத்தருக்கு வயிற்றுவலி தீர்ந்ததும் (பக். 32), திருவாவடுதுறை ஆதீன தேசிக சுவாமிகளுக்கு ஏற்பட்ட துயரத்தை திருச்செந்தூர் முருகன் நீக்கியதும் (பக். 39), மைசூர் அரண்மனையில் பணி செய்து வந்த அர்த்தநாரி என்பவர், முருகன் அருளால் திருப்புகழ் பரப்பும் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகளாகத் திகழ்ந்ததும் (பக். 49), நாசிக் நகரத்தில் வள்ளிமலை சுவாமிகளுக்கு ஏற்பட்ட அனுபவமும் (பக். 83), பாம்பன் சுவாமிகளுக்கு, திருவனந்தபுரத்தில் ஷஷ்டி விழாவில் ஏற்பட்ட அதிசயமும் (பக். 87), முருகன் அருளால் ஞானக்கண் பெற்ற மாம்பழ கவிச்சிங்கம், புலவராகி, பல பாக்கள் பாடியதும் (பக். 128), வெங்கடேச ஐயர் என்னும் அன்பர்க்கு, கந்தன்குடி முருகன் அருள் செய்ததும் (பக். 216), பேரையூர் தும்பிச்சி நாயக்கருக்கு முருகன் அருளியதும்(பக். 339), படிக்கப் படிக்க பக்தியை பெருக்கும், அனுபவங்கள்.
டாக்டர் கலியன் சம்பத்து