எளிமையான நடையில் எழுதப்பட்ட இந்நூல், ‘தர்மசக்தி’ என்ற வார இதழில் தொடர்ந்து ஒரு ஆண்டிற்கும் மேலாக வந்தது. அந்தத் தொகுப்பு தான், இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது.
மனதிற்கு அமைதியையும், ஆன்மிக அனுபூதியையும் கொடுக்கக் கூடிய நூல் பகவத் கீதை. இதில் கூறப்பட்டுள்ள உண்மைகள் எல்லா காலத்திற்கும் பொருந்தும். ‘நம் மனதில் உள்ள கெட்ட எண்ணங்களைப் போக்குவது, நெற்பயிர்களுக்கு இடையே முளைத்து இருக்கும் களைகளை எடுப்பது போல், நல்ல எண்ணங்களை மனதில் ஏற்றினால், மன அழுக்குகள் போய்விடும்.
அதற்கு நல்ல ஞானிகளின் வாழ்க்கை வரலாற்று நூலைப் படிக்க வேண்டும்.
இப்படிப்பட்ட பயிற்சியும், வைராக்கியமும் தான், தியான யோகத்தின் அடிப்படை என்பது போன்ற கருத்துகள் இந்த நூலை அணி செய்கின்றன.
–எஸ்.குரு