முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை -40; பக்கங்கள்: 320;
இக்கலிச் செய்யுள் எல்லாம் சங்கு திரண்டு முரன்றெழும் ஓசைபோலத் தழைத்து இன்பம் பயக்கும் ஓசை நலம் உடையனவாக, அவற்றில் அமைந்துள்ள பொருள் வளமும் கருத்து மாண்பும், அளவிடற்கு அரிய சிறப்பினவாய்த் திகழ்கின்றன. இத் தொகையின் கண் ஐந்திணையின் கருப் பொருள்களின் இயல்களும் ஆண்டு வாழும் மக்களின் பெற்றிமைகளும் கிழியில் எழுதிக் காட்டினால் ஒப்ப அழகுறத் தெளிந்து தோன்றுகின்றன.
- பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார்.
சிறந்த உள இயல் நூல் எனத் தகுந்தது மருதக்கலி என்று அறிந்தோம். உலக வாழ்வின் கூறுகளை எழுத்தோவியம் ஆக்கிக் கற்போர் கருத்தில் ஆழப்பதியுமாறும், நினைதொறும், நினைதொறும் இன்ப ஊற்று எழுமாறும் செய்யுள் இயற்றும் புலவர் தம் பாடல்கள் இதன் கண் உள்ளன என்று அறிதலும் வேண்டும்.
- டாக்டர் மு. வரதராசனார்.