எழுத்தாளர் கல்கி என்றவுடன் வாசகர்களுக்கு ஞாபகம் வருவது, பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும் தான். அதிலும், பொன்னியின் செல்வனை படித்தவர்கள், அதன் பிரமிப்பில் இருந்து உடனே வெளியே வர முடியாது.
சித்திர கதைகளை படிப்பதில் குழந்தைகள் எப்போதும் ஆர்வம் காட்டுவர். அந்த வகையில், காமிக்ஸ் வடிவில் இந்நுாலை வெளியிட்டு உள்ளது, குழந்தைகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். முதல் தொகுதியை படித்து முடித்தவுடன், அடுத்த தொகுதி எப்போது வெளியாகும் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது.