வாமன புராணம், வியாச முனிவரால் எழுதப்பட்ட பதினெண் புராணங்களில் ஒன்று. மூவடிகளால் பெருமாள் உலகளந்த வரலாற்றை உரைக்கும் இந்நுாலில் பல தகவல்கள் அடங்கியுள்ளன. குருசேத்திரத்தில் தான் லோமஹர்ஷன முனிவர் மற்ற முனிவர்களுக்கு வாமன புராணத்தை எடுத்துரைத்தார் என்று குறித்துள்ளார்.
வரலாற்றுக் காலத்திற்கு முன் நிகழ்ந்த தக்கனின் யாகம், இமவான் மகளான பார்வதி பிறப்பு, காமதகனம், விநாயகர் அவதாரம், முருகன் பற்றிய கதை, மகிடாசுரன் வதம், அந்தகன் பற்றிய செய்தி, வாலி, சுக்ரீவன் முற்பிறப்பு, பிரமனுக்கு நான்கு தலை வந்த வரலாறு, கோஷ்டிபுர புத்திரன் கதை, பலி மன்னனின் வரலாறு, தாருகன் வதம், கிரெஞ்சவதம், தாருகாசுரன் வதம், நளன் பிறந்த வரலாறு முதலியவற்றை விளக்கமாக எடுத்துரைக்கும் இந்நுால், ஒவ்வொன்றையும் கதை போல விளக்குகிறது.
ஆசிரம தருமம், தானம், தருமத்தின் குணங்கள், லிங்க பூஜையின் சிறப்பு, அட்சய திருதியையின் சிறப்பு ஆகியவற்றை விளக்கமாக எடுத்துரைக்கிறது. இப்புராணத்தைப் படிப்பவரும், கேட்பவரும் அஸ்வமேத யாகம் செய்பவர் பெறும் பயனை அடைவர் என்று நுாலாசிரியர் கருத்துரைத்துள்ளார்.
– ராம.குருநாதன்