நிவேதிதா புத்தக பூங்கா, எண்.14, இரண்டாவது தளம், பீட்டர்ஸ் ரோடு, இராயப்பேட்டை, சென்னை- 14. போன்:9282231997; பக்கங்கள்: 208;
வாசிப்பவரை கதைக்குள் இழுத்துவந்து, கதை முடியும் வரை கட்டிப்போடுவதும், கட்டுண்ட வாசகன் எந்த முரண்டும் பிடிக்காமல் அந்த நிலையை ஏற்றுக் கொள்வதுமே! ஒரு கதை வெற்றி பெற்ற படைப்பாக உருவாகியிருப்பதன் அடையாளம் என்று எங்கோ படித்திருக்கிறேன்.
இந்த இலக்கணம் மற்றவகை இலக்கியப் படைப்புகளை விட திகில் கதைகளுக்கு மிகவும் பொருத்தமானதாக தோன்றுகிறது இல்லையா? - இத்தொகுப்பில் உள்ள மூன்று திகில் நாவல்களும் இந்த வகையான கட்டிபோடும் கதைகள் தான்.
அமானுஷ்யக் கதைகளை எழுதும்போது, நேரடியாக திரையில் படமாக ஓடுவதுபோல் ஒரு காட்சித் தோற்றத்தையும் பரபரப்பையும் வாசகனுக்கு எழுத்தாளர் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் படிப்போரின் மனதில், பயமும் படபடப்பும் அடுத்து என் நடக்குமோ என்ற சுவாரஸ்யமும் உருவாகும். இத்தொகுப்பில் உள்ள திகில் நாவல்களில் அதிர்ச்சியும், திகிலும், பதட்டமும் பக்கத்துக்குப் பக்கம் பதிவாகியுள்ளது.
ஆக்ஸிடோஸின் ஹார்மோன்களை சுரக்கச் செய்யும் தனக்கே உரிய இளமை வழியும் நடையும், வாசிப்போரை வசியம் செய்திருக்கிறார் ஆர்னிகா நாசர். மனதை திடப்படுத்திக் கொண்டு படிக்கத் தொடங்குங்கள். ஒரே நேரத்தில் மூன்று ஆங்கில திகில் படங்கள் பார்த்த திருப்தி கிடைக்கும் என்பது எனது உத்தரவாதம்.
-எஸ்.ஆர். சுவாமி நாதன்.